திருச்சி சரக காவல்துறையினருக்கு என தனி வாட்ஸ் அப் குரூப் செயல்பட்டுவருகிறது. இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருடன், ஜீயபுரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் பர வாசுதேவன் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டது. இதை கண்ட காவலர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர். இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து இது குறித்த விசாரணை அறிக்கையை டி ஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் டிஎஸ்பி. பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலே ந்திரபாபு உத்தர விட்டுள்ளார்.
டிஎஸ்பி பரவாசுதேவன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் டிஎஸ்பி.ஆக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
No comments:
Post a Comment