சமுதாயத்தில் ஆசிரியர்களின் பணியும், டாக்டர்களின் பணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறை யில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக்கடினமான முறையில் நடந்த அறுவை சிகிச்சைகள் கூட இப்போது எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் செய்யக்கூடிய வசதிகள் வந்து விட்டன. நம்நாடு மருத்துவ அறிவியலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.
அதே போல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப் பணியிலும் நாம் நவீன உத்திகளைக் கையாண்டு கல்வியைத் தொய்வில்லாமல் தொடரமுடிந்தது. எந்த செயலை செய்வதற்கும் அச்சம் கூடாது. எனினும் அச்சப்பட வேண்டியதற்கு அச்சப்பட்டே ஆக வேண்டும். இக்கால மாணவர்களிடம் அறிவாற்றல் நிறைய இருக்கிறது. அதை இனம் கண்டு வெளிக்கொணர ஆசிரியர்கள் உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment