திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி பத்தாவது மாவட்ட மாநாடு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 November 2022

திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி பத்தாவது மாவட்ட மாநாடு.


திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி பத்தாவது மாவட்ட மாநாடு புத்தூர் நால்ரோடு பிரிவு அருகில் உள்ள  ராமலிங்கம் இரண்டாவது குறுக்குத் தெருவில் இருக்கும்  கூட்டுறவு மினி ஹாலில்  நடைபெற்றது, மாநாட்டியின் கொடியை ஏ ஐ டி யு சி மாநில செயலாளர்  ஆறுமுகம் ஏற்றி வைத்து மாநாட்டை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

மாநாட்டினை வாழ்த்தி விவசாய சங்கம் மாநில துணை செயலாளர் இந்திரஜித் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள் 45 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


அதில்  புதிய நிர்வாகிகளாக  தலைவராக நடராஜா  துணைத் தலைவர்களாக ஜனசக்தி உசேன் சிவா செல்வகுமார் நேரு துரை திராவிட மணி பொதுசெயலாளராக சுரேஷ் செயலாளர்களாக சுப்பிரமணியன் கணேசன் முருகன் கங்காதரன்  அன்சர்தீன் பொருளாளராக ராமராஜ் ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி ஏ.ஐ.டி.யூ.சி  மாநில செயலாளர் சின்னச்சாமி உரை நிகழ்த்தினார் அனைவருக்கும் சுரேஷ் முத்துச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad