மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 September 2022

மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட மொத்தம் 397 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு  ரூபாய் 91.50 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப.,  வழங்கினார். 


இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர்  த.இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், வட்டாட்சியர்  கோ.புஷ்பராணி, ஒன்றியக் குழுத் தலைவர்  சரண்யா மோகன்தாஸ், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ந.முரளி, ஊராட்சித் தலைவர்கள் லலிதா கண்ணன், ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad