இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்ட குழு கூட்டம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 September 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்ட குழு கூட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்ட குழு கூட்டம் பொத்தமேட்டுபட்டி எம்.எஸ்.வி.சட்ட அலுவலகத்தில் மாவட்டகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இன்றய அரசியல் நிகழ்வு பற்றி மாவட்ட  செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி தேசிகன் பேசினார். கூட்டத்தை வாழ்த்தி வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார் பேசினார். 


கூட்டத்தில் அக்டோபர் - 9 ந்தேதி நகர, ஒன்றிய மாநாடுகளை முடிப்பது. அக்டோபர் -11 ந்தேதி வையம்பட்டி ஒன்றிய மாநாடுகளை முடிப்பது. அக்டோபர் - 16 ந்தேதி மாவட்ட மாநாட்டை முடிப்பது.


மாநாட்டிற்குள் கட்சி உறுப்பினர் சேர்ப்பு வெகுஜன உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்டவைகளை முடிப்பது .அக்டோபர் 2  மனித சங்கலி போரட்டத்தை வெற்றி கரமாக்குவது. நவம்பர் 26.27 திருச்சி வயலூரில் நடைபெறகூடிய சிபிஐ(எம்எல்) கட்சியின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டது. 


கூட்டத்தில் மாவட்டகுழு உறுப்பினர்கள் பாரதி, அருள் குணசேவியர், கருப்பையா, ஆவா இளையராஜா, ராமாயி உள்ளிட்ட மாவட்டகுழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad