அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணி மாவட்டச் செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:- கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆரும், அவருக்குப்பின் ஜெயலலிதாவும் சிறப்பாக தமிழகத்தை ஆட்சி செய்தனர். அவர்கள் வழியில் எடப்பாடி பழனிசாமியும், நான்கரை ஆண்டுகள் தமிழகத்தை வழிநடத்தி அ.தி.மு.க. ஒரு குடும்பச்சொத்து இல்லை என்று நிரூபித்தார்.
தனது ஆட்சிக்காலத்தில், மருத்துவப்படிப்பில் ஏழை, எளிய அரசுப் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஓதுக்கீடு வழங்கி கல்வித்துறையிலும், நீர்நிலைகளை தூர்வாரி, புதிய பாசன திட்டங்களை கொண்டு வந்து வேளாண்துறையிலும் புரட்சி செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தால் 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதற்கான பலனை மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.
நீட்தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் என கொடுத்த வாக்குறுதி எதையும் தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை. அமைச்சர்களின் செயல்பாடுகளால் துாக்கமில்லாமல் தவிப்பதாக முதல்வர் ஸ்டாலினே தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். மின் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியிருக்கின்றனர். இதனால் மக்கள், வியாபாரிகள், தொழில்துறையினர் என அனைவரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 2024 லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வரும். அப்போது தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். நீங்களும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment