திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

திருச்சி மாவட்டத் ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பு தாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தின் மூலம் பயணிகள் இலகுவாக பயணம் செய்திட அனைத்து முக்கிய வழித்தடங்கலிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி் சந்தி ரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து வருகின்ற 20.10.2022 முதல் 31.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா மீனா திரையரங்கம் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மா ர்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அரு சிலும் புறப்படும் வண்ணம் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படஉள்ளது. 


சோனா மீனா திரையரங்கம் மற்றும் மன்னார்புரம் ரவுண்டானா தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இரவு. பகல் அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து இணைப்பு பேரு நீதுகள் இயக்கப்படவுள்ளது. திருச்சி மண்டல இயக்க பகுதி- களான வால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி. துறையூர், பெரம்பலூர், அரிய லூர், ஜெயங்கொண்டம் ஆகிய பெருகிய நிலையங்களிளிருந்து பயணிகளின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 


மேலும், நாளை (21.10.2022) 23.10.2022 வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய த்திலிருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்கப்பட உள்ளது. 


அதன்படி திருச்சி மத்திய பேருந்து  நிலையம்-சென்னை 150 சிறப்பு பேருந்துகளும், அரியலூர், ஜெ யங்கொண்டம்-சென்னை 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர், பெரம்பலூர், -சென்னை 20 சிறப்பு பேருந்துகளும். திருச்சி மத்திய பேருந்து நிலையம்-மதுரை- திருச்சி மத்திய பேருந்து நிலை யம்-கோவை 20 சிறப்பு பேருந்தும் பேருந்து நிலையம்-திண்டுக்கல், பழனி 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம்-தஞ்சாவூர் 50 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அரியலூர், ஜெயங்கொண்டம் 50 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்- பெரம்பலூர் 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சந்திரம் பேருந்து நிலையம்-துறையூர் 25 சிறப்பு பேருந்துகளும். என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 


மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்தி்லிருந்து ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேசன் சிஸ்டம் மூலம், முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது பயணிகள் தங்களின் குழந்தைகளையும், உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

No comments:

Post a Comment

Post Top Ad