முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நில வரப்படி வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நிலையில் படிப்படியாக நீர்வரத்து மேலும் உயர்ந்து இன்றைய தினம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. 


திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்றைய தினம் 51 ஆயிரம் கனஅடிநீர்: வந்த நிலையில், இன்று நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 86,000 கனஅடி நீர் வந்தது. பின்னர் 8 மணிக்கு 96 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதில் 74 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்படுகிற- து. மேலும் 500 கனஅடி தண்ணீர் பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்டுள்ளது. 


முக்கொம்பு மேலணைக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் வருவதால் திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்றைய தினம் மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள ஒரு


லட்சத்து 85 ஆயிரம் கனஅடி நீர் நாளை காலை முக்கொம்பு அணைக்கு வந்துவிடு ம். ஆகையினால் நாளைய தினம் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்ப டும் நீரின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டம் பிரதீப் குமாரும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் செல்பி எடுப்ப து, குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான மற்றும் மேடான பகுதிக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad