இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்)கட்சியின் நகர மாநாடு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்)கட்சியின் நகர மாநாடு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை எம்.எஸ்.வி.சட்ட அலுவகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்  சிபிஐ(எம்எல்)கட்சியின் நகர மாநாடு நகரகுழு உறுப்பினர் மெக்கானிக் இளையாஜா தலைமையில் நடைபெற்றது. 


மாநாட்டை விளக்கி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி ஞானதேசிகன். பேசினார். மாநாட்டை வாழ்த்தி வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார் பேசினார்.

 

மாநாட்டில் 11 பேர் கொண்ட  நகரகுழு தேர்வு செய்யபட்டது. பாலு, மெக்கானிக் இளையராஜா ,கோகுல், முருகேசன், சங்கர்ராஜ், அலாவுதீன், பாஸ்கர், நாகராஜ், நித்திஷ், காதர் ஷெரீப், அறிவழகன், சிறப்பு அழைப்பளாராக ஜோதிபாசு ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டு நகர செயலாளராக பி.பாலு ஏகமனதாக தேர்வு செய்யபட்டார். 


கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

  1. மணப்பாறை நகர பகுதிகளில் மக்களை மதரீதியாக சாதிரீதியாக பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை முறியடிக்க மாநாடு உறுதியேற்று கொண்டது.
  2. கார்ப்ரேட் ஆதரவு மதவெறிப் பாசிச எதிர்ப்பு அரசியலை முறியடிக்க மாநாடு உறுதியேற்று கொண்டது. 
  3. மணப்பாறை பேருந்து நிலையத்தில் தூய்மையான இலவச சிறுநீர் கழிப்பிட வசதியை திருச்சியில் உள்ளது போல் மணப்பாறை பேருந்து நிலையத்திலும் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  4. மணப்பாறை நகரத்தில் தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க   வேண்டும்.5.மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே உள்ள மனமகிழ் மன்றத்தின் சொந்தமான இடத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  5. மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி MRI ஸ்கேன் வசதிகள் உள்ளிட் அனைத்து வசதிகளையும் மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறுவதற்கான வசதியும். நரம்பு மருத்துவர் உள்ளிட்ட காலியாக உள்ள  அனைத்துமருத்துவர்களையும் நியமித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. மணப்பாறை வட்டாச்சியர் அலுவலகம் சார்நிலை கருவூலம் வட்டவழங்கல் துறை சார்பதிவாளர் அலுவலகம் காவல்நிலையம் என அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்திற்குள் பொதுகழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறது வட்டாச்சியர் அலுவலகம் அருகே கட்டபட்டு இருந்தும் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருக்கிறது. உடனே வட்டாச்சியர் அலுவலகம் உள்ளே கட்டபட்டுள்ள பொதுகழிப்பிட கட்டிடத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8. மணப்பாறை நகர பகுதிகளில் இளைஞர்கள் மாணவர்கள். கஞ்ஞாவுக்கும். மதுபோதைக்கும் அடிமையாகி வருகின்றனர். ஆகவே மணப்பாறை நகர பகுதிகளில் கள்ளதனமாக விற்பனை செய்யும் கஞ்சா மற்றும் மதுவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  9. மணப்பாறை நகர பகுதிகளில் 1 முதல் 27 வார்டுகள் வரை பொதுமக்கள் செல்ல கூடிய குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சிரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  10. மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 27 வார்டு வரை உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்து தங்குதடையின்றி காவேரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  11. மணப்பாறை நகர பகுதிகளில் சுற்றிதிரியும் பொதுமக்களை அச்சுருத்தும் தெருநாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், 
  12. மணப்பாறை நகர பகுதிகளில் பணிபுரியும் துய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திட அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி முறையாக சம்பளத்தை வழங்கிட வேண்டும் துய்மை பணியாளர்களை பணி நிரந்தர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  13. மணப்பாறை நகர பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீரும் சாக்கடை நீரும் ஒன்று சேர்ந்து பொதுமக்கள் வீட்டிற்குள்ளும் பொது இடங்களிலும் தேங்கி நிற்கிறது. ஆகவே மணப்பாறை நகர பகுதிகளில் பாதள சாக்கடை திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. கிராமபுரங்களில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நகர்புறத்திலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டது. மாநாட்டில் தோழர்கள் கலந்து கொண்டனர். 

இறுதியாக நகரகுழு உறுப்பினர் நித்திஷ் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad