தொட்டியம் வட்டம் எம்.களத்தூரில் ஏரி அமைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் கொல்லிமலை பகுதியில் பெய்த மழை நீர் பழைய பாளையம், தூசூர், வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், வழியாக எம். களத்தூர் ஏரியை அடைந்தது. இதனை அறிந்த முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் எம்.களத்தூர் பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் மழை நீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த மலர் தூவி வரவேற்றார்.
இதில் தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் மேக்க நாயக்கன்பட்டி பி.தங்கவேல் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந.திருஞானம் மற்றும் தொட்டியம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் எம். களத்தூர் பகுதி விவசாயிக ள் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment