இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார் தோழர் ப. மாணிக்கம் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் த. இந்திரஜித் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத் அலி ரவிச்சந்திரன் ரஹ்மத்துனிஷா ஏ ஐ டி யு சி அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் சுப்பிரமணியன் அமைப்புசாரா தொழிற்சங்க பொதுச் செயலாளர் நல்லுசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மருங்காபுரி ஒன்றிய செயலாளர் வெள்ளகண்ணு தேவகி பரமசிவம் விஜயசங்கர் நகர நிர்வாகக்குழு உறுப்பினர் மரிய ராஜ் கிளை செயலாளர்கள் ராஜா ஆரிஃப் கேசவன் பொன்னுச்சாமி சின்னகண்ணு உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று ப.மாணிக்கம் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment