திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட பாலப்பராமரிப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என்.நேரு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 October 2022

திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட பாலப்பராமரிப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என்.நேரு.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி பஞ்சக்கரையில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம் பழுதடைந்துள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்இ.ஆ.ப. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மாதவன், நிர்வாகப் பொறியாளர் பன்னீர் செல்வம், துவாக்குடி நகரமன்றத் தலைவர் காயம்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad