சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் கால தாமதம் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 October 2022

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் கால தாமதம் பொதுமக்கள் அவதி.

கோப்பு படம்.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில் கே. சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். 


இது குறித்து பொ துமக்கள் தெரிவிக்கையில்: கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்சினை காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக இருந்து வந்தாலும், பத்திரங்களை சரி பார்ப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். பத்திரப்பதிவுக்கு சிலர் கை குழந்தையுடன் வரும் காரணத்தி னால் நீண்ட நேரம் அவதியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இவை தவிர பத்திர பதிவிற்கு வருபவர்களிடம், அலுவலர்கள் நீண்ட நேரம் உரையாடும் நிலை ஏற்படும் காரணமாகவும் பத்திர பதிவில் தாமதம் ஏற்படுகிறது. 


மேலும் நண்பகல் 3.30 மணி வரை பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்களை தாக்கல் செய்வ தற்கான நேரம் இருக்கும்போது சார்பதிவாளர் 3 மணிக்கு மேல் பத்திரங்கள் தாக்கல் செய்வத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பத்திரம் பதியவரும் பொதுமக்கள் அடுத்த நாள் வரும் நிலை ஏற்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திலிருந்து வரும் முதி யவர்கள் மற்றும் பெண்களும் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். 


காலை 10மணிக்கு துவங்க வேண்டிய பத்திரபதிவானது சுமார் 11 மணி அளவில் துவங்குவதால் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படுகிறது. இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பத்திரப்பதிவின் போது குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக தொகை செலுத்துவதற்கு எதுவாக மின்னணு எந்திரம் (பி ஓ எஸ்) இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. 


இதனை உடனடியாக சீர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கடந்த ஒரு மாத காலமாக இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்திப்பதில் இருந்து தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad