நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு.
பட்டுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாட்டின் சட்ட மன்றத் தேர்தல் நடக்கும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது, அவர்கள் மனம் போன போக்கில் எல்லாம் பேசுகிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறினார்.
அவருடன் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மகளிர் அணி ரொக்கையா, புலவர் தியாகராஜன், மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துகுமார், கே.கே.நகர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment