பள்ளி சென்ற சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 October 2022

பள்ளி சென்ற சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு.

முசிறி பேரூராட்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தண்டலைபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு நடந்தே அவர் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் தொட்டியம் பகுதியை சேர்ந்த சங்கீத் (21) என்பவர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவரது கவனத்தை ஈர்த்தார். 

பின்னர் சிறுமிக்கு காதல் வலை வீசினார். இதில் அந்த சிறுமியும் வசமாக சிக்கிக்கொண்டார். இதற்கிடையே அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் தகவல் அறிந்து சங்கீத் அவ்வப்போது அங்கு சென்றார். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளடைவில் இதுபற்றி அறிந்த அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் அந்த சிறுமியை மீட்டு சென்று அங்குள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார். 


இதனை உடனடியாக தெரிந்து கொண்ட சங்கீத் அங்கு சென்று சிறுமியை கடத்தினார். பின்னர் அவர் பல்வேறு மாவட்டங்களில் லாட்ஜில் அறை எடுத்து தங்கி சிறுமியை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமியின் உறவினர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த சங்கீத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8-ம் வகுப்பு சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad