சாலையில் சுற்றிய கால்நடைகளால் பொதுமக்கள் பாதிப்பு உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 October 2022

சாலையில் சுற்றிய கால்நடைகளால் பொதுமக்கள் பாதிப்பு உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பு.

ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடை மைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடைகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்குமாறு கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இருந்தபோதிலும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவது வாடிக்கையானது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் சமயபுரம் வாரச்சந்தை, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பேரூராட்சி பணியாளர்க ள் பறிமுதல் செய்து பேரூராட்சி திருமண மண்டப பகுதியில் நிறுத்தி வைத்தனர். 


இந்த மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும். மீண்டும் இதேபோல் சாலைகளில் சுற்றித்திரிந்து மாடுகள் பிடிபட்டால் ரூ.5,000 அபராதமாக செலுத்திய பிறகே மீட்கலாம். அதற்கு பின்னரும் சாலைகளில் வலம் வந்தால் அந்த மாடுகளை பிடித்து எலம் விடப்படும் என செயல் அலுவலர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad