இதனையொட்டி திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் காவல்துறையில் வீர, தீர பணிகளில் ஈடுபட்டிரு ந்தபோது தங்களது இன்னுயிர் நீத்த 273 போலீசாரின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எழிலுற அமைக்கப்பட்டிருந்த நீத்தார் நினைவு தூணில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு தூணுக்கு ஐ.ஜி. தலைமையில் வீரவணக்கம் சுஜித்குமார் மற்றும், மாநகர காவல் துணை ஆணையர்கள், திருச்சி சரக காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை பேண்டு வாத்தியங்கள் முழ ங்கிட ஆயுதப்படை போலீசார் 3 முறை விண்ணை நோக்கி 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தி, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின்போது, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் நிதியுதவிகளையும் வழங்கினார்.
No comments:
Post a Comment