மணப்பாறை அருகே மிகவும் பழைமை வாய்ந்த பூதநாயகி அம்மன் கோவில் பொன்னுஞ்சல் நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 October 2022

மணப்பாறை அருகே மிகவும் பழைமை வாய்ந்த பூதநாயகி அம்மன் கோவில் பொன்னுஞ்சல் நிகழ்ச்சி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் மிகவுக் பழைமையான பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 96 கிராம மக்களின் குலதெய்வமாக திகழும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழாவின் தொடக்கமாக கடந்த மாதம் 19 ம் தேதி பூச்சொரிதல் விழாவும், அதைத் தொடர்ந்து 20 ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. 


திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னுஞ்சல் நிகழ்ச்சி இரவு தொடங்கியது.  அலங்கரிப்பட்ட பூதநாயகி அம்மனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா சென்ற பின்னர் பள்ளிவாசல் அருகே ஊஞ்சலில் வைத்து நள்ளிரவு தாழாட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பலரும் அம்மனை வழிபட்டனர். அதன் பின்னர் பொன்னுஞ்சல் நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலை சாமி புறப்பாடு தொடங்கி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கனகானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad