திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டு கோயில் என்ற இடத்தில் அகோர வீர பத்திரர் மற்றும் அச்சப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று நடந்த திருவிழாவில் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்து கலந்து கொண்டனர்.அவர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்த பூசாரி சாட்டையால் பெண்களை அடித்து வரம் தந்து ஆசீர்வாதம் செய்தார். பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகள் கடன் தொல்லைகள் போன்றவை குறித்து வேண்டிக்கொண்ட ஆண்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து பூசாரி பரிகாரம் செய்தார். இந்த வினோத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment