இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் தங்கராசு, நகர செயலாளர் ஜனசக்தி உசேன், சின்னதுரை, காங்கிரஸ் கட்சி நகர தலைவர், நகர் மன்ற உறுப்பினர் செல்வா ஜெகநாதன், சி.பி.எம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் சீனிவாசன், ராஜேந்திரன், மாலிக், மதிமுக பாதுஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தன், அன்பு, தி.க நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து கழக மாநில துணை பொது செயலாளர் சுப்ரமணியன் மாநில தலைமை முடிவு குறித்து பேசினார். மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து புதுதெரு கச்சேரி சாலை திருச்சி ரோடு காந்தி சிலை கோவில்பட்டி சாலை காமராஜர் சிலை வரை அக்டோபர் 11 ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை மாலை நாலு மணிக்கு தொடங்கி ஆறு மணிவரை நடத்துவது மாவட்ட தலைவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யபட்டது சி.பி.ஐ. காங்கிரஸ், ம.தி.மு.க சி.பி.எம். வி.சி.க தி.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment