துறையூர் அருகே உள்ள வடக்கு- வெளி கிராமத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் மோட்டார் வாகன அலுவலகம் உள்ளது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சத்தியமூர்த்தி லஞ்சம் கேட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ராஜாமணி என்பவர் தற்காலிகமாக மோட்டார் வாகன ஆய்வாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். அவரும் கடந்த ஒரு வார காலமாக வராததால் ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், வாகன உரிமம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடந்த ஒரு வார காலமாக வந்த பொதுமக்கள். உரிய அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனையடுத்து ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் முடிந்து நேற்றும் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாததால், அதிருப்தி அடைந்து அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment