ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 October 2022

ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதி தாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கண்பார்வை தின விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி கலந்து கொண்டு உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். 


மேலும் விழிப்புணர்வு பலூன்களும் பறக்க விடப்பட்டன. இந்த நிகழ்ச்சி யில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா. நிர்வாக தலைவர் டாக்டர் தெல்சன் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து பாரத் குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.          


முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக என்.எஸ். எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா சிறப்புரையாற்றினார். டாக்டர் பிரதீபா விழிப்புணர்வு நிகழ்வின் நோக்கங்களை விளக்கினார். மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் பேசும்போது, உலசு சுகாதார நிறு வனத்தின் தகவலின் படி உலகம் முழுவதும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் கொண்டுள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. 


உலக பார்வை தினத்தையொட்டி கண் நலன் பற்றிய சில முக்கிய செய்திகளையும், ஒரு நோயை குணப்படுத்துவதை காட்டிலும் அதனை எவ்வாறு வராமல் தடுப்பது, ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணப்படுத்துவது போன்ற சில முக்கிய தகவல்கள் இந்த விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு தெரிய ப்படுத்தப்படுகிறது என கூறினார். இதற்கான ஏற்பாடு களை மருத்துவமனையில் நிர்வாக அலுவலர் சுபா பிரபு மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad