முத்தரப்பு பேச்சு வார்த்தையால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 October 2022

முத்தரப்பு பேச்சு வார்த்தையால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்.

காந்தி மார்க்கெட் தக்காளி கமிஷன் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 3 தினங்களாக கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் ஒரு பெட்டி தக்காளி லோடு இறக்குவதற்கு ரூ.11 கூலி உயர்த்தி வழங்குவது எனவும், இந்த ஒப்பந்தம் மூன்றாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் எனவும் இறுதி செய்யப்பட்டது. 


இதில் கூலி உயர்வை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த காலக்கெடுவை இரண்டே முக்கால் வருஷமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தினால் ரூபாய் 40,50 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்றைய தினம் ரூ.100 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தாசில்தார், மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தக்காளி கமிஷன் மண்டி தலைவர் ஹலிலுல் ரகுமான் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 


இதில் உயர்வு ஒப்பந்த காலக்கெடு 3 வருடத்தில் ஒன்றரை மாதம் குறைத்து இறுதி செய்யப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த தக்காளி கமிஷன் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் தக்காளி லோடுகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கினர். வேலை நிறுத்தம் நீடித்து வந்ததால் நேற்றைய தினம் பல வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்யவில்லை. 


இதனால் இன்று காலை 4 லோடு தக்காளி மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்தது. நாளைய தினம் 200 டன்னுக்கு மேல் தக்காளி ஆர்டர் செய்யப்பட்டு காந்தி மார்க்கெட்டுக்கு வரும் எனவும், நாளை முதல் தக்காளி விலை குறையும் எனவும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad