மணப்பாறை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது விடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் மாவட்டகுழு உறுப்பினர் சௌக்கத்அலி ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன் ஒன்றியகுழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனாம்பட்டி கிளை சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

அம்மனுவில் சூளியபட்டி, எஃப்.கிழையூர் உசிலம்பட்டி, பொடங்குபட்டி,, சாம்பட்டி ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுகள் மருத்துவ வசதிபெற மையபதியாக உள்ள ஆனாம்பட்டியில்1980 இல் இருந்து இயங்கி வரும் துணை சுகாதார நிலையத்தை ஆனாம்பட்டியி பொது மக்கள் அரசுக்கு கொடுத்த நிலத்தில் புதிய வாளகம் அமைத்து தொடர்து இயங்கிட கோரியும், பனைமத்து பகுதியில் இருந்து சாம்பட்டி வரை மிக பழுது அடைந்து உள்ள தார் சாலையை புதிப்பித்து கொடுக்க கோரியும், ஆனாம்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி மாணவ மாணவிகளுக்கு கல்வி முழுமையாக கிடைக்க, ஆனாம்பட்டியில் உள்ள காவேரி உயர் நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி தடை இன்றி காவேரி குடிநீர் கிடைக்க வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்
- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment