மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 2 November 2022

மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் எப். கீழையூர் ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிடருக்கு கடந்த 20 ஆண்டு முன் திமுக ஆட்சியின் போது வருவாய்த் துறையினரால் பட்டா வழங்கினார்கள். அன்று வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் இடத்திற்கான அளவு தெரியாமல் உள்ள நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் அந்தப் புகார் மனு அடிப்படையில் எந்தவித நடவடிக்கை எடுக்காமலும் முறைப்படி அளந்து தராத காரணத்தினால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தற்போது வரை அந்த இடங்களில் வீடு கட்டி பயன்படுத்த முடியாத இடங்களில் வீடு கட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த சூழலில் தற்போது அந்த இடத்தில் அரசு அறிவிப்பு ஆணை ஒன்றை பிளக்ஸ் பேனர் ஆக வைத்துள்ளார்கள் அந்த பிளக்ஸ் பேனரில் வருவாய்த் துறை வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி வசிக்காத உள்ள இடங்களை அரசு குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து கையகப்படுத்தப்படும் என்று வைத்துள்ளார்கள் அந்த அறிவிப்பு பலகை வைத்திருந்ததை பார்த்த ஆதிதிராவிட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த இடத்தை அளந்து கொடுக்க கூறி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


இதனைத் ஆதி திராவிட மக்கள் ஒவ்வொருவராக துணை வட்டாட்சியாளரிடம் மனு கொடுத்தார்கள் இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சியாளர் வட்டாட்சியாளரும் தெரியப்படுத்தி துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad