திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கண்ணனூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் சரவணன் உள்ளிட்ட வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.

No comments:
Post a Comment