மணப்பாறை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தனம் கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறை பாபநாசத்திற்கு பயணம் செய்து சிரமப்பட்டும் வாரிசு சான்று கிடைக்கவில்லை, இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் பா.அப்துல் சமது-விடம் கோரிக்கை வைத்தார்கள்.

உடனடியாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப அப்துல் சமது அறிவுறுத்தலின் அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லா அவர்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரச்சனையை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இன்று சரி செய்யப்பட்டது.
தனம் அவர்களுக்கு வாரிசு சர்டிபிகேட் முறையாக வந்து சேர்ந்தது, தனது பிரச்சினையை சரி செய்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருக்கும் மற்றும் மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் தனம் தனது நன்றியை தெரிவித்தார்கள்.

No comments:
Post a Comment