மணப்பாறை மதுரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு மேற்பார்வையாளர் பணியினை சீனியாரிட்டி அடிப்படையில் உள்ளூர் பணியாளர்களுக்கு வெளியூரில் இருந்து பணி நியமனம் செய்யாதே பணியாளர்கள் பணிபுரிய உகந்த வகையில் தரமான தளவாட சாமான்கள் வழங்கிடு பணியாளர்களின் சம்பளத்தில் பிஎஃப் தொகையை இருப்பு விபரத்தை காட்டிடு முதல் தேதியிலேயே சம்பளம் வழங்கிடு ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளித்திட நடவடிக்கை எடு அரசாணை எண் 672 தினக்கூலி 78 வழங்கியது ஒப்பந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கிடு மூன்றாண்டு பணி முடித்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்திடு ஒரே சம்பவம் தொடர்பாக நாலுமே நாலு பேர் பாதிக்கப்பட்டது ரெண்டு அலுவலர்களுக்கு ஒரு நீதி 2 தொழிலாளர்களுக்கு ஒரு நீதி என்பதில் கைவிடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பயன்களை வழங்கிடு குப்பைகள் கொட்டும் இடத்தை ஒவ்வொரு வார்டிலும் அடையாளம் காட்டிடு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்,சங்கத்தின் கெளரவ தலைவர் தங்கமணி தலைமை வகித்தார் பழனிச்சாமி காமாட்சி வேல்முருகன் கோட்டையாம்மாள் கணேசன் குமார் பிச்சை அருனகிரி செல்வம் தமிழரசன் ராஜேஸ் தங்கராசு காளியப்பன் சாந்தி மாரியப்பன் நல்லுச்சாமி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மாவட்டத் துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் மணப்பாறை கிளை கவுரவத் தலைவர் சௌகத் அலி டி என் எஸ் டி சி மண்டல தலைவர் சுந்தர்ராஜ் மணப்பாறை அமைப்புச்சார சங்க தலைவர் பழனிச்சாமி பொது செயலாளர் நல்லுச்சாமி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரை நிகழ்தினார்கள் முன்னதாக தொழிலாளர்கள் கண்டன முழக்க மீட்டனர்.

No comments:
Post a Comment