இதை எடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று கத்திகாரன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இல்லாமல் தனிநபர் அதில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகாலம் பயன்படுத்தி வந்த சாலையை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அதை அகற்றி தருமாறும் அந்தப் பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வந்த நிலையில் பாதையை சரிசெய்து கொடுக்காத நிலையே இருந்துள்ளது. இதுனால் ஆத்திரமடைந்தால் பெரியக்காள் உறவினர்கள் உடலை சாலையில் வைத்து எரிப்பதற்கு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எந்த விட உடன்பாடும் எட்டப்படாத திடீரென முல்வேலியை அகற்றி விட்டு உடலை சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். அப்போது பெண்கள் உடலை ஏறியூட்டுவதற்கு கட்டைகளை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்கே சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment