தபால் தினத்தை முன்னிட்டு மணப்பாறை அரசுப் பள்ளியில் நடைபெற்ற அழகிய நிகழ்வு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

தபால் தினத்தை முன்னிட்டு மணப்பாறை அரசுப் பள்ளியில் நடைபெற்ற அழகிய நிகழ்வு.


ஆரம்ப காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் மிகச்சிறந்த சேவையாற்றி வந்தது தபால் என்றால் நிச்சயமாக அதை மறுக்க முடியாது. உள்ளத்தின் உணர்வுகளை, எண்ணத்தின் வெளிப்பாடுகளை வரிகளால் வலிகளோடு, உணர்ச்சியாய் வெளிப்படுத்திட நபால் இன்றியமையாத சேவையாக அமைந்திருந்தது. இதனால் அஞ்சலசங்களின் பயன்பாடும் மிக தேவையுள்ளதாகவே அமைந்திருந்தது. 

இதற்கென இங்கிலாண்டு லெட்டர் என சில கடிதங்களும் அஞ்சல் நிறுவனங்கள் மூலம் வழங்கப்ப டும். இது நாடி உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதமாக மட்டுமல்லாமல், அனைத்து துறை சார்ந்த தகவல்களும் கடிதம் மூலமே கிடைக்கப்பெற்று வந்தது. ஆனால் நவீன உலகில் துறையால் பேஸ்புக், வாட்ஸ் என நவீன உலகின் விதவிதமான தொழில் நுட்பத்திலான ஆப்களில் தகவல்களை எளிதாக சில வினாடிகளில் பரிமாற்றம் செய்து விடுகிறோம். 


இதனால் இப்போது உள்ள தலைமுறைக்கு கடிதம் என்றால் என்னவென்று கேட்கும் நிலையோடு கடிதம் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில்தான் தபால் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் முயற்சியில் சுமார் 240 மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் துறையில் இருந்து கடிதங்கள் வாங்கி வந்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக தபால் கடிதத்தை பார்த்ததாக கூறிய மாணவர்களிடம் கடிதம் தொடர்பான விளக்கங்களை ஆசிரியர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் முதல் முறையாக தங்களின் பெற்றோருக்கு மடலாக எழுதினர், இதுமட்டுமின்றி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என் தங்களின் விருப்பதிற்கு உரியவர்களுக்கு உள்ளங்களில் தோன்றிய எண்ணங்களை வரிகளாக எழுதினர். 


வாழ்வின் இலக்கு என்ன என்பதையு வளர்ந்து விட்ட தொலைத்தொடர்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் கடிதங்களில் குறிப்பிட்டு இருந்தனர், மேலும் சில மாணவர்கள் தங்கள் தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை மற்றும் குடும்பத்தில் நிம்மதி இழந்து வாழும் நிலையையும் விளக்கி கூறி இருத்தனர். சில மாணவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சனை, உயிர் உறுப்புக்கள் மின் இழப்பு ஆகியவை பற்றியும் வேதனையோடு பதிவு செய்துரு ந்தனர். வாகனங்களில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். இயற்கையை என்பதில் ஐயம் இல்லை.


நேசித்து இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வளம் நிறைத்த பகுதியாக நம் வாழும் வசிக்கும் பகுதிவிளங்க அரசு வலியுறுத்துவது போல், மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கல்வி இல்லா கிராமமே இல்லை என்ற நிலையில் தாம் கற்ற கல்வியின் மூலம் கல்வி பணியாற்றிட வேண்டும் என அதிகமான வரிகளை எழுதி இருந்தனர். 


பின்னர் மாணவ, மாணவிகள் தாங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போட்டனர். அரசு பள்ளியில் தபால் சேவையை மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் முன்னுதாரமாக இரு அமைந்ததுடன் அனைத்து தாப்பு மக்களின் கவளத்தையு ம்வெகுவாக ஈர்த்தது. மடல்களால் நிறைந்த தபால் பெட்டி வரும் தலைமுறைக்கு தபால் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

Post Top Ad