200 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

200 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்.


திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுந்திகரிக்கப்படுகிறது. கடந்த 1995-ல் 88, 64 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கட்டமைப்புகள் உகுவா க்கப்பட்டது. தற்போது அதில் 58 மில்லியன் லிட்டர் கழிவு நீர் மட்டுயே சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. 30 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் தற்போதைய பெருகி வரும் மக்கள் தொகையை கண க்கில் கொண்டு அம்ரூத் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் நவீன தொழில்நுட்பத்தில் 37 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் நிலையில், மேலும் 10 ஆண்டு மக்கள் தொகையினை கணக்கிட்டு பஞ்சப்பூரில் புதிதாக இன்னொரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 


ரூ.200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நவீன சுத்திகரிப்பு நிலையத்தில் 100 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க முடியும். இதற்கு பஞ்சப்பூரில் புதிதாக அமையுள்ளது.மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் கூறினார்


ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை சென்னை நகராட்சிநிர்வாக இயக்குனருக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதிக நிலம் தேவைப்பட்டது. ஆனால் தற்போதைய எஸ்.பி.ஆர். தொழில்நுட்பத்திற்கு குறைந்த அளவு நிலம் போதுமானது என மாநகராட்சி பொறியாளர் சிவநாதன் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad