இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. திருச்சி என். சிவா, திரு. சு. திருநாவுக்கரசர், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மரு.இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., மாநில அளவிலான வங்கியாளர் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. ரியாசுல் ஹக், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 2021-22ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகளை வட்டார அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊரக சுயஉதவிக் குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்பு, நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்கள் ஆகிய 33 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கி சிறப்பித்தார்.
No comments:
Post a Comment