திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்திதால் காகித நிறுவனத்தின் 2 ம் அலகில் அமைக்கப்பட்டுள்ள ஆலை விரிவாக்கத்தின் முதல் கட்டமாக 1385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வன்மரக்கூல் ஆலை அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க துவக்க விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மரக் கூல் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் கட்டுப்பாட்டு அறையில் இயந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அட்டை தயாரிப்பு உள்ளிட்டவைகளை பார்வையிட்ட பின் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் 47.44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து சிப்காட் தொழில் பூங்காவில் உணவு பூங்கா உள்ளிட்ட நான்கு நிறுவங்களுக்கு ஒதுக்கிட்டு ஆணைகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் ஆலையை முழுமையாக சுற்றிப் பார்த்த அவர் அங்குள்ள விருந்தினர் அறையில் மதிய உணவு முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
திருச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment