மணப்பாறை தாலுக்கா புத்தாநத்தத்தில் 100 நாள் வேலை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் செய்தனர், மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம் ஊராட்சியில் 20 கிராமங்கள் உள்ளன இக்கிரமங்களின் நடைபெற்று வந்த 100 நாள் வேலை திட்டம் கடந்த மூன்று மாதங்களாக செயல்படாதால் உடனடியாக கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புத்தாநத்தம் ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள கடைவீதியில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மணப்பாறை ஒன்றிய ஆணையர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புத்தாநத்தம் கிளை செயலாளர் மன்சூர் புத்தாநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிராஜுதீன் மாவட்ட குழு உறுப்பினர் ஹக்கீம் சேட் மற்றும் 100 நாள் வேலை பயனாளிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வருகின்ற திங்கட்கிழமை முதல் 100 நாள் வேலைத்திட்டத்தை இவ் ஊராட்சியில் நடைமுறை படுத்துவது என்ற உறுதி மொழியை கொடுத்ததை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment