துறையூர் தொகுதியில் புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 January 2023

துறையூர் தொகுதியில் புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


அரசு போக்குவரத்துக்கழகம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியை சேர்ந்த வைகறை, கங்காணிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தனர். 


இது தொடர்பாக தங்கள் பகுதிக்கு பேருந்து வசதியினை ஏற்பாடு செய்து தரக் கோரி துறையூர்  சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் வேண்டுகோளின் படி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் துறையூரிலிருந்து கலிங்கமுடையான்பட்டி, மெய்யம்பட்டி வழியாக கங்காணிப்பட்டி வரையிலான புதிய பேருந்து வசதியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஷ்டம்ஸ் மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கினைச் செயலாளர் முத்துசாமி. இளைஞர் அணி அருண். தொ.மு. சங்கத்தை சேர்ந்த சுப்பையா, ராஜு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


மேலும் இதே போன்று பெத்துபட்டியிலிருந்து சின்ன சேலம் வழியாக துறையூர் வரையிலான வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad