மணப்பாறை நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 January 2023

மணப்பாறை நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.


மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஆர்.வி.பி. மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர நிர்வாககுழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி தலைமைவகித்தார் நகர செயலாளர் ஜனசக்தி உசேன் நடைபெற்ற வேலைகள் கூறித்து உரை நிகழ்தினர்  திருச்சி புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் பழனிச்சாமி இன்றைய அரசியல் நிலைகூறித்து பேசினார்.

தமிழக அரசே நகராட்சி கடைகளின் உரிமையாளர்களை விட்டு விட்டு ஊழியர்களிடம் வரிப்பாக்கி கேட்டு கந்து வட்டி நபர் போல் நடந்துகொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமதி.சியாமளா அவர்களை பணியிடை நீக்கம் செய்திடு!. 


தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 12.1.2023 அன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது, மணப்பாறை சர்ச் காம்ளக்ஸ் முன் உள்ள  கழிவுநீர் செல்லும் மேம்பால  பாதையின் கீழ்பகுதியில்   மதுரை ரோட்டில் இருக்கும் மேல் நீர் தேக்க  தட்டிக்கு செல்லும்  காவிரி குடிநீர் குழாய் பைப்பும் எதிர்புறத்தில் திண்டுக்கல் சாலை பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பும் உள்ளது, இவ்விரு  பைப் லைனையும் கழிவு நீர் செல்லும் பாதையில் இருந்து   மேல் உயர்த்தி  அமைத்துக் கொடுக்க. நகராட்சி நிர்வாகத்தையும் குடிநீர் வடிகள் துறையையும் நகரகுழு  வலியுத்தியும் தீர்மானங்கள் நிரைவேற்றபட்டது.


மரியராஜ் சின்னத்துரை சுப்ரமணியன் சௌக்கத்அலி  நல்லுச்சாமி  உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad