கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 November 2024

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

 


கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது"


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் வள்ளலார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் வள்ளலார் கல்வி நிலையங்கள் எஸ்  தயாளன் தலைமை தாங்கி பேசினார்.


செயலாளர் எம் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியர் டி .ஹேமலதா,தலைமை ஆசிரியர் சி. பானுமதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.


கும்பகோணம் வள்ளலார் அரிமா   சங்க தலைவர் லயன் டி. விஜயன் ,செயலாளர் லயன் ஆர்.கணேசன்,பொருளாளர் லயன் கு.அருண்,துணை தலைவர் லயன் G. அசோகன் ,சங்க பொறுப்பாளர் லயன் குமார் ,மண்டல ஒருங்கிணைப்பாளர் எம் ஜே எப் லயன்  எஸ் .இரவி மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்.


குழந்தைகளுக்கு , பாட்டு பாடுதல், கவிதை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


வெற்றி பெற்றவர்களுக்கு கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க தலைவர் ,பொருளாளர் செயலாளர்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பரிசுகள் .வழங்கினார்.


முன்னதாக இடைநிலை ஆசிரியர்  ஆசிரியர் க. ஜெயந்தி  வரவேற்றார். நிறைவில் இடைநிலை ஆசிரியர் வே .வசந்தி நன்றி கூறினார்.


இடைநிலை ஆசிரியர் கா. ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad