துறையூர்:புலிவலம் ஓயாசீஸ் கல்லூரி சார்பில் போதை பழக்கம் ஒழிப்பு பேரணி
திருச்சி மாவட்டம் துறையூரில் 04 10 2024 அன்று காலை சுமார் 10 மணியளவில் துறையூர் அருகே புலிவலத்தில் இயங்கி வரும் ஓயாசீஸ் பொறியியல் கல்லூரி சார்பில் கல்லூரி நிர்வாக இயக்குனர் கே.ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தலின் படி மாணவ மாணவியர் பங்கேற்ற போதைப்பழக்கம் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர் "போதைப் பழக்கத்தை ஒழிப்போம்" போதையில்லா நாட்டை உருவாக்குவோம்""போதை பழக்கத்திலிருந்து மீள்வோம்" போன்ற பதாகைகளை ஏந்தி முழக்கமும் இட்டனர்.
துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து முசிறி பிரிவு ரவுண்டானா சாலை வரை நடைபெற்ற பேரணியை துறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சோமசுந்தரம், சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேரணியில் கல்லூரி முதல்வர், ஐக்யூ ஏ சி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment