மணப்பாறையில் சமூகநல்லினக்க மணித சங்கிலி போராட்டம் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 September 2022

மணப்பாறையில் சமூகநல்லினக்க மணித சங்கிலி போராட்டம் ஆலோசனை கூட்டம்.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சி.பி.ஐ. சி.பி.எம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூகநல்லினக்க மணித சங்கிலி போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணைச்  செயலாளர் த.தங்கமணி தலைமை வகித்தார் சி.பி.ஐ. நகர செயலாளர் ஜனசக்தி உசேன்  மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி ரகமத்துனிஷா சின்னதுரை சிண்ணகண்ணு, சி.பி.எம் வட்டகுழு உறுப்பினர்கள்  சுரேஷ் சீனிவாசன் உசேன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தன் வழக்கறிஞர்  மோகன், முகமது ரசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி மாநில தலைமை முடிவு  குறித்து  பேசினார், மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை அக்டோபர் 2 ம் தேதி சமூக நல்லிணக்க மணித சங்கலி போராட்டதை மாலை நாலு மணிக்கு தொடங்கி ஆறு மணிவரை நடத்துவது என்று முடிவு செய்யபட்டது சி.பி.ஐ. சி.பி.எம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad