இதனைத் தொடர்ந்து, தொப்பம்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 38.70 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும், குதிரைக் குத்திப் பட்டி கிராமத்தில் 15 ஆவது நிதிக்குழு நீட்டத்தின் கீழ் ரூபாய் 8.14 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணியினையும், பிரதமமந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டட கட்டுமானப் பணிகளையும், கனிமவள நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 14.65 இலட்சம் மதிப்பீட்டில் உப்பாற்று வாரியில் நடைபாலம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர். செட்டியப்பட்டி ஊராட்சி, பிச்சை மணியாரம்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடப் பணிகளையும், பிரதமமந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 240 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார், இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment