தொட்டியம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 October 2022

தொட்டியம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

தொட்டியம் பேரூராட்சி எல்லை க்கு உட்பட்ட இரண்டாவது வார்டு அண்ணா நகர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் ஆலோசனைப்படி, முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி ந.தியா கராஜன் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. 

இந்த குடியிருப்பு பகுதி சாலையின் இருபுறமும் கொட்டகைகள் முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் குப்பைகள் சாலையை ஆக்கிரமித்து காணப்பட்டன. இவற்றால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்து வந்தனர். இடையூறாக இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரம் டிராக்டர் கொண்டும் அகற்றும் பணி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இதற்கான நடவடிக்கையை தொட்டியம் பேரூராட்சி தலைவர் சா.சரண்யாபிரபு மேற்கொண்டார். இதில் தொட்டியம் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி சீனிவாசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad