இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: நம்மைப் பெற்றவர்கள் முதுமையடையும் போது அவர்களிடம் அன்பு செலுத்தி பாதுகாப்பது நமது கடமையாகும். அவர்களது வாழ்வின் அனுபவம் நம்மை வழிநடத்துவதற்கு இன்றியமையாததாகும். அவர்களை தனிமைப் படுத்துவதும், முதியோர் இல்லங்களில் விடுவதையும் தவிர்த்திட வேண்டும். நாமும் முதுமையடைவோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதியோர்கள் தங்கள் சுற்றத்தாரிடம் அன்பு பாராட்டி மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும். முதியோர்களைப் பாதுகாத்திடும் வகையில் அரசும் திட்டங்களை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. முதியோர்களின் மகிழ்வான வாழ்விற்கு அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும். என்று பேசினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு முதியோர்களுக்கும் போர்வைகள் வழங்கப்பட்டன. முதியோர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் மா.நித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பொ.ரேணுகா, தேர்தல் வட்டாட்சியர் முத்துச்சாமி. மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் பி.மோகன், கண்காணிப்பாளர் சி.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment