திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து, முதல் நிலை மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பிரதீப் குமார், இ.ஆ.ப., தொடங்கி வைத்துப் பேசினார்.
வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை அலுவலர்கள், பணியாளர்கள் திட்டமிட்டு சிறப்பாக மேற்கொள்ளவும், தன்னார்வலர்கள் சிறப்பான முறையில் தங்களது சேவையினை வழங்கிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைகள் வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் சித்ரா மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment