தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு, மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பட்டாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு. திருமாவளவன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பீட்டர், துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன் பெரியகருப்பன், மணப்பாறை நகரச் செயலாளர் எம்.கே. முத்துப்பாண்டி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா. ஜெகநாத் ஆகியோரும் பயனாடை அணிவித்து அமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment