முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தி விழா. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 October 2022

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தி விழா.

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்க ட்டளை சார்பில் ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அனைத்து சமுதாய தலைவர்களுக்கு மாமன்னர் புலித்தேவன் விருது வழங்கும் விழா ஆகியவை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

விழாவுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டி யன் தலைமை தாங்குகிறார்.திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும். முன்னாள் பொது சுகாதாரக்குழு தலைவருமான டாக்டர் எஸ்.தமிழரசி சுப்பையா குத்து விளக்கு ஏற்றி வைக்கிறார். இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் புலித்தேவன் விருது வழங்கி பேசுகிறார்.


மேலும் இந்த விழாவில் அமைச்சர் புலித்தேவன் விருதினை டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்குகிறார். இந்த விழாவுக்கு ஆர்.பரமசிவதேவர், ஆர்.நாகலிங்கத்தேவர், பி.மணிவேல், எஸ்.எம்.சிவக்குமார் தேவர், ஆர்.கருப்பையா தேவர் ஆகியோர் முன்னிலை


வகிக்கிறார்கள். கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவையின் மாநில தலைவர் பா.ஜான் ராஜ்குமார், பாதிரியார் டேவிட் பரமானந்தம், மதுரம் மருத்துவமனை டாக்டர் ஐவன் மதுரம், டாக்டர் எம்.இப்ராஹிம் ஆகியோர்இறைவணக்கம் செலுத்துகிறார்கள். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு தேவர் ஜெயந்தி மலரினை பெறுகிறார். விழாவில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி. எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி என். தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார். சவுந்தரபாண்டியன், எம். பழனியாண்டி, எஸ்.கதி

ரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துசெல்வன், விஜயா ஜெயராஜ், பகுதி செயலா ளர்கள் கனகராஜ், சுமல் முஸ்தபா, கே.எஸ். நாகராஜ், கோட்டத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், பகுதிச் செயலாளர்கள் காஜாமலை விஜி. ராம்குமார், இளங்கோ, மாநகராட்சி கவுன்சிலர் கலைச்செல்வி, டோல்கேட் சுப்பிரமணியன் ஆகியோருக்கு புலித்தேவன் விருது வழங்கப்படுகிறது. முடிவில் டாக்டர் எஸ்.விஜய் கார்த்திக் சுப்பையா, எஸ். மருதுபாண்டி, கே.ஆர்.கே.ராஜா ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad