திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், அந்தநல்லூரில் உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., சிறப்புப் பார்வையாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி. ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் வனிதா சத்யசீலன், ஊராட்சித் தலைவர் ஆ.பிரியங்கா, துணைத் தலைவர் கா.கார்த்திக், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ச.கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜன் பன்னீர்செல்வம் மற்றும் வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment