திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து, உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் செல்வி .எஸ். ஸ்ருதி, வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், உதவி ஆணையர் அக்பர் அலி, வட்டாட்சியர் த.கலைவாணி, மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள், பயிற்றுநர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment