மணப்பாறை மதுரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு கோயம்புத்தூரில் நடைபெறும் ஒப்பந்தப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் சங்க துணை செயலாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார் ஏஐடியுசி அமைப்புசாரா சங்க பொது செயலாளர் நல்லுசாமி, ஏஐடியுசி போக்குவரத்து கழக மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராஜன் கிளை செயலாளர் மாசிமலை கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர நிர்வாக குழு உறுப்பினர் மரியராஜ், உள்ளாட்சி தொழிலாளர் ஏஐடியுசி சங்கம் காளியப்பன், சாந்தி, பழனியம்மாள், வடிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட சங்கத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment