மணப்பாறை அருகே பல்நோக்கு கட்டிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 October 2022

மணப்பாறை அருகே பல்நோக்கு கட்டிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறப்பு.

மணப்பாறை அருகே  சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்நோக்கு கட்டிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறப்பு,  புதிய பேருந்து தடம் வேண்டி பள்ளி மாணவி சீருடைடன் மனு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வி பெரியபட்டி ஊராட்சி அதிகாரிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கீழ் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியின் போது அங்க அமைக்கப்பட்டிருந்த மேடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சீருடைகள் வந்து அவர் பள்ளிக்கு செல்வதற்கு புதிய பேருந்து தடம் அமைத்து தர வேண்டும் என்று அமைச்சரிடம் மனு அளித்தார் அந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அந்த மேடையில் பேசுகையில் பள்ளி மாணவியே தனக்கு பள்ளி சென்று வர புதிய பேருந்து தடம் அமைத்து தர வேண்டும் என்று மனு அளித்ததை சுட்டிக்காட்டி இந்த மனுவிற்கு மாவட்ட ஆட்சியாளரை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.


இந்த நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் தலைமையில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் வையம்பட்டி ஒன்றிய குழு தலைவர் குணசீலன் ஆகியோர் முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad