வையம்பட்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் ஒன்றிய மாநாடு - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 October 2022

வையம்பட்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் ஒன்றிய மாநாடு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிபிஐ(எம்எல்) கட்சியின் ஒன்றிய மாநாடு முகவனூர் ஊராட்சியில் ஒன்றியகுழு உறுப்பினர் விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.ஞானதேசிகன் சிறப்புரை ஆற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் அருள்குண சேவியர் சமர்பித்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார். மணவை நகர செயலாளர் பாலு, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டில் 11 பேர் கொண்ட ஒன்றியகுழு தேர்வு செய்யபட்டது அருள் குணசேவியர். ராமாயி. விஜயலெட்சுமி ஆரோக்கியசெல்வி. சந்திரா. லதா, மோகன். கார்திகா, நாகலெட்சுமி, ராமதாய், கதிர்மணி. மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஆறுமுகம், சீதா. ஆகியோர் தேர்வு செய்யபட்டு ஒன்றிய செயலாளராக ஏகமனதாக அருள்குண சேவியர் தேர்வு செய்யபட்டார். 


மாநாட்டில் போடப்பட்ட தீர்மனம்: 

  1. வையம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நிகழும் தீண்டாமை-சாதி-மதம் பகுபாடு முழுமையாக ஒழித்து தடுக்கப்பட  வேண்டும். 
  2. வையம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகாளன குடிநீர்,பொது கழிப்பிடம்,சாலை வசதி,சாக்கடை நீர் செல்வதற்கான வடிகால் போன்ற வசதிகளை ஏற்படுத்தி,சுகாதாரத்தை மேம்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும்.
  3. வையம்பட்டி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை இழிவுப்படுத்துவது அதிகாலையில் இருந்து புகைப்படத்தை எடுப்பதை கைவிட வேண்டும்,100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை ஊராட்சி நிர்வாகமே வழங்கிட வேண்டும். 100 வோலை செய்யும் இடங்களில் குடிநீர், முதல் உதவி சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகாரணங்கள் இருக்க வேண்டும்.
  4. வையம்பட்டி     ஒன்றியத்தில் உள்ள அனைத்து  கிராம மக்களுக்கும் 100 நாள் வேலையை  முழுமையாக வழங்கிடவும், முழுமையான சட்ட கூலி மற்றும் சட்ட பாதுகாப்பினை வழங்கிட வேன்டும்.
  5. வையம்பட்டி ஒன்றிய முகவனூர்  கிராமம் சடையநாயக்கனுர் பகுதி மக்களுக்கு தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் மேலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மயானம் வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.
  6. வையம்பட்டி ஒன்றியம் அயன்ரெட்டியப்பட்டி கிராமம் இளங்காகுறிச்சி பகுதியில் உள்ள 4-வது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர் வழங்கிடவும், முறையான சாலை வசதி அமைத்து கொடுக்கவும்,பொது கழிப்பிட வசதி, சாக்கடை நீர் செல்வாதற்கானவடிகல் அமைப்பு,சரியான முறையில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
  7. வையம்பட்டி ஒன்றியம் அயன்ரெட்டியப்பட்டி கிராமம் இளங்காகுறிச்சி பாரதியார் நகர் மற்றும் அருந்ததியர் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், பொதுகழிப்பிடம்,   முறையான சாலை வசதி, சாக்கடை நீர் செல்வதற்கான வடிகால், தெருவிளக்குகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளாதால் அதனை பாரமரிப்பு செய்து கொடுக்க வேண்டும்.
  8. வையம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழந்தைகளை கூட்ட செல்வது,குப்பை அள்ள சொல்வது, கழிப்பிடத்தை சுத்தம் செய்ய செல்வது போன்ற நடவடிக்கைகளை பள்ளி குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது வண்மையாக கண்டிப்பதோடு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
  9. வையம்பட்டி ஒன்றியம் அயன் ரெட்டியப்பட்டி கிராமம் பொதுமக்கள்  மற்றும் கர்ப்பிணிப்ப பெண்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் ஆகவே வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும். 
  10. வையம்பட்டி ஒன்றியம் முகவனுர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதாக எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். 
  11. வையம்பட்டி ஒன்றியம் முகவனுர் கிராமம் 6 வது வார்டு பகுதி மக்களுக்கு சமத்துவ சமுதாய கூடம்,முறையான சாலை வசதி செய்து தர வேண்டும். 
  12. மணப்பாறையில் இருந்து கடவூர் வரை செல்லும் அரசு டவுன் பஸ் மணப்பாறையில் இருந்து செல்லும்போது, கடவூரில் இருந்து வரும்போதும் இடையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் பேருந்தை நிறுத்தினால் பேருந்து நிற்பது இல்லை ஆகவே பேருந்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்,கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். 
  13. வையம்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலையில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களை வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும் மற்றும் செய்த பணித்தள பொறுப்பாளர்கள்  மீண்டும் பணி செய்த இடத்திற்கு 100 நாள் வேலை முடியும் வரை வராக்கூடாது.
மேற்கண்ட 13 தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது மாநாட்டில் 9 பெண்கள் ஒன்றியகுழு உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad